மருத்துவருடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய செவிலியர் சடலமாக மீட்பு: சிக்கிய கடித குறிப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

லக்னோவில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய மருத்துவர் செவிலியரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் நகர் குடியிருப்பாளர் பகுதியை சேர்ந்த சமந்தா (24), கேதரி கிராமத்தில் முதன்மை சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

ஆயுர்வேத மருத்துவராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் திரிபாதி (38), 2016ம் ஆண்டு சித்ரகூட் பகுதியில் பணிபுரியும் போது சமந்தாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 26ம் தேதி இருவரும் சேர்ந்து ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். வெளியில் சாப்பிட மட்டும் சென்றுவிட்டு மற்ற நேரத்தை அறையிலேயே கழித்துள்ளனர்.

வியாழக்கிழமையன்று காலை 10மணிக்கு வெளியில் சென்ற ராஜேஷ், இரவு 8 மணியாகியும் ஹோட்டலுக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அறைக்கு சென்று பார்த்தபோது, உள் தாழ்பாள் போடப்பட்டிருந்தது.

ஒருமணி நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால், மாற்று சாவியை கொண்டு அறையை திறந்துள்ளார். கழுத்தில் துணியால் இறுக்கியபடி சமந்தா இறந்து கிடப்பதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சமந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு சோதனை மேற்கொண்ட போது இரண்டு மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர். அதோடு சேர்ந்து ஒரு கடிதம் ஒன்றினையும் கைப்பற்றியிருந்தனர். அந்த கடிதத்தில், நான் சமந்தாவை அதிகம் விரும்பினேன். ஆனால் அவள் அப்படி இருக்கவில்லை. அதனால் தான் கொலை செய்தேன். நானும் தற்போது தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என எழுதப்பட்டிருந்தது.

தற்போது கடிதத்தை கைப்படியிருக்கும் பொலிஸார், தற்கொலை செய்துகொள்வதாக கூறிய ராஜேஷ் எங்கு சென்றார் என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்