காதலி தற்கொலை செய்துகொண்ட மறுநிமிடமே விபரீத முடிவெடுத்த காதலன்

Report Print Vijay Amburore in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம் காதல் ஜோடி அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கைககம் கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான பாரத். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த 18 வயதான குருபாய் என்கிற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் குருபாய் வீட்டிற்கு தெரியவரவே, மகளை கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டில் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால் இதற்கு குருபாய் வீட்டார் மறுப்பு தெரிவித்துளள்னர். இதனால் மனமுடைந்த குருபாய், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றன்றுள்ளர்.

இந்த சம்பவம் சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பாரத், காதலி போலவே அவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.

உடனே இருவரையும் மீட்ட உறவினர்கள் வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போது, இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்