மகளை தவிக்கவிட்டு வெளிநாட்டில் சம்பாதிக்க சென்ற பெற்றோருக்கு வந்த சோக செய்தி

Report Print Vijay Amburore in இந்தியா

பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் இருந்ததால், தனிமை பொறுக்காமல் இளம் பத்திரிக்கையாள மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவ பெங்களூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த சோபியா டமானி என்கிற 19 வயது இளம்பெண், விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவருடைய பெற்றோர் இருவரும் துபாயில் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் விடுதியில் சேர்ந்த சோபியா, நண்பர்கள் யாருடனும் சேராமல் தனிமையிலே இருந்துள்ளார்.

இந்த நிலையில், கல்லூரிக்கு செல்லாத சோபியா தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு அறையிலே தங்கியுள்ளார்.

கல்லூரி முடிந்து திரும்பிய மாணவிகள் அறையை திறந்து உள்ளே சென்ற போது, சோபியா எந்த அசைவுமில்லாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் சென்றடைந்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வீட்டில் நடத்திய தேடுதல் வேட்டையில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், "உன்னுடன் இரவு உணவில் கலந்து கொள்ளாததற்கு என்னை மன்னித்துவிடு" என தோழி ஒருவருக்கு எழுதப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மாணவியின் தற்கொலைக்கு காரணம் பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் தனிமையில் மனஅழுத்தம் அதிகரித்து முடிவை எடுத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும், மாணவியின் அறையில் இருந்து இரண்டு மருந்து பாட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்