என் மனைவியை கொலை செய்ய போகிறேன் – விடுமுறை கொடுங்க..! பரபரப்பு ஏற்படுத்திய லீவு லெட்டர்

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில் வங்கி ஊழியர் ஒருவர் மனைவியை கொலை செய்ய போவதாக விடுமுறை கோரியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவிக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. இதற்காக அவர் அடிக்கடி விடுமுறை எடுத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஆண்டில் குறிப்பிட்ட விடுமுறைகள் மட்டுமே உள்ளதால் அவரது விடுமுறை தினங்கள் முடிந்து விட்டதாக வங்கி நிறுவாகம் தொடர் விடுமுறை வழங்க மறுத்துள்ளது.

இதனால் கோவம் அடைந்த அவர் தனது மனைவியை கொலை செய்து இறுதி சடங்கு நடத்த விடுமுறை வழங்குமாறு வங்கி மேல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் அதன் நகலை பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அதிர்ந்து போன வங்கி நிறுவாகம் அவருக்கு உடனடியாக அவருக்கு விடுமுறை வழங்கி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்