தமிழகம் வந்த மோடியை கடுமையாக எதிர்த்த மக்கள்! உலக அளவில் முதலிடம் பிடித்த #GOBACKMODI

Report Print Santhan in இந்தியா

தமிழகம் வந்த மோடியை எதிர்த்து பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்ததால், #GOBACKMODI என்ற ஹெஷ்டேக் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி கடந்த முறை தமிழகம் வந்த போது, திமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். இவர்களின் போராட்டத்தால் பிரதமர் மோடி சாலை மார்க்கம் செல்ல முடியாமல் தவித்தார்.

இதனால் அவர ஹெலிகாப்டர் மூலம் செல்வார் என்பதை அறிந்து வானத்தில் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தமிழகம் வரும் மோடிக்கு காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கியதும், கஜா புயலின் பாதிப்புகளை பார்வையிடாததற்கும் கருப்பு கொடி காட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தியது.

மோடி ஆட்சியின்போது பேரிடர் காலங்களில் வேண்டிய நிதி உதவி கேட்டு தராமல் பாதியாக அளித்தது, ஜல்லிக்கட்டு பிரச்னை, முத்தலாக் விவகாரம், என மத்திய அரசு என தமிழக மக்களின் வெறுப்பை ஏகத்துக்கும் பாரத பிரதமராக உள்ள மோடி சம்பாதித்து வைத்து இருக்கிறார்.

இது போன்று நிலை இருக்கும் போது தான் பிரதமர் மோடி இன்று, தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக வருகிறார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வந்தவுடனே தமிழக வருகையைக் கண்டித்து டுவிட்டர் போன்ற சமூக தளங்களிலும் ஏராளமானோர் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில், இந்திய அளவில் மட்டும் அல்லாமல், #GOBACKMODI என்ற ஹேஷ்டாக் இன்று உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் இன்று அடிக்கல் நாட்ட வந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சுமார் 264 கோடி ரூபாயில் மத்திய அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

202 ஏக்கரில், 750 படுக்கை வசதியுடன், 48 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும் எனவும் தவிர, 100 மருத்துவ படிப்பு இடங்கள், 60 நர்சிங் படிப்புகளுக்கான இடங்கள் வழங்கப்படும் என்றும் இந்த பணிகள் மற்றும் பராமரிப்பு அனைத்தும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்