முன்கூட்டியே பிரச்சாரம் துவங்கினாரா பிரதமர் மோடி..?

Report Print Abisha in இந்தியா

இந்திய பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழக திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியது, முன்கூட்டியே மோடி தேர்தல் பிரசாரம் செய்வதாக தலைவர்கள் கருத்துக்கு உடன்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி தமிகத்தில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள இன்று தமிழகம் வந்தார்.

அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபின் பாராதிய ஜனதா கட்சியின் பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றும், உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாட்டில், இருந்தாலும் அரசு அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊழலுக்கு எதிராக எங்கள் அரசு எடுத்துள்ள நடிவடிக்கை டெல்லி முதல் சென்னை வரை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், ஊழலுக்கு எதிராக நான் செயல்படுவதால் என்னை நீக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மோடிக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்துள்ள கட்சிகள், இணைந்து நடத்திய கொல்கத்தா கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார். அங்கு பேசிய ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியதாக தெரிகிறது.

10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சில கட்சிகள் தமிழக மக்களிடம் பொய்யான தகவல்கள் பரப்பி வருகின்றனர். தமிழக இளைஞர்கள் விழிப்புடன் இருக்கும்படியும் கூறினார். இதில் திமுக சார்பில் இந்த பிரச்சனைக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தலைவர்கள் மோடி தமிழகம் வருகைக்கு கடும் எதிர்பு தெரிவித்து வந்த நிலையில் இதுபோன்ற கருத்துகள் முன்கூட்டிய பிரச்சரம் துவங்கி உள்ளாரா..? என்று கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்