மோடிக்கு என்ன அருகதை தமிழ்நாட்டுக்கு வருவதற்கு? சீறிய வைகோ... வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய வைகோ கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக முழக்கமிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வந்தார்.

மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் கருப்பு நிறக்கொடிகள், பலூன்களை வைத்து போராட்டம் நடத்தினார்கள்.

இதை தொடர்ந்து வைகோ உட்பட அவர் கட்சியினரை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வைகோவை பேருந்தில் ஏற்றிய போது, மோடியே உனக்கு தமிழகம் வருவதற்கு என்ன யோக்கியதை உள்ளது?

மன்னிக்க மாட்டோம் மோடியை என அவர் முழக்கமிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்