இதனால் தான் அரசியலுக்கு வந்தேன்: கமல்ஹாசன் பேச்சு

Report Print Kabilan in இந்தியா

தனது மனசாட்சி உறுத்தியதால் தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், நெய்வேலி மந்தாரக்குப்பம், விருத்தாசலம் ஆகிய ஊர்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘என்னுடைய மனசாட்சி என்னை உறுத்தியதால் தான் அரசியலுக்கு வந்தேன். அரசியல்வாதிகளை முதலாளிகளாக நினைத்துவிட்டீர்கள். அவர்கள் முதலாளி இல்லை. நீங்கள் தான் முதலாளி. உங்களுடைய அதிகாரத்தை நீங்கள் கைப்பற்றியாக வேண்டும்.

எனக்கு கிடைத்த பணம், புகழ் அனைத்துக்கும் நீங்கள் தான் பங்காளிகள். கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவன முதலாளிகள் சரியாக வரி செலுத்துவதில்லை. அவர்கள் கஜானாவை காலி செய்வதும் அதை நீங்கள் நிரப்புவதுமாக உள்ளது.

உங்களுக்கு இலவச சாப்பாடு போட்டு பிரயோஜனம் இல்லை. தடபுடலாக மீன் குழம்பு சாப்பாட்டு போட விரும்பவில்லை. தூண்டில் வாங்கித் தரவே விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்