தனது கார் ஓட்டுனர் மனைவி சடலத்துடன் 5 நாட்கள் இருந்த நபர்! கொடூர கொலையின் பகீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கார் ஓட்டுனரின் மனைவியின் சடலம் படுக்கைக்கு கீழே இருப்பது தெரியாமலேயே 5 நாட்கள் படுக்கையில் நபர் ஒருவர் படுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் குருகிராமை சேர்ந்தவர் தினேஷ்குமார். தேனீர் தொழில் செய்து வருகிறார்.

இவர் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த திங்கட்கிழமை குருகிராமுக்கு திரும்பினார்.

பின்னர் தனது தொழிலுக்கு சென்றுவிட்டு இரவு தனது அறையில் உள்ள படுக்கையில் படுத்து தூங்கியுள்ளார். இரண்டு இரவு அவர் தூங்கும்போது அறையில் எதோ துர்நாற்றம் வீசியது.

ஆனால் ஜன்னல் வழியாக துர்நாற்றம் வீசுவதாக நினைத்து தினேஷ் விட்டுவிட்டார். இந்நிலையில் நேற்று சுவாசிக்க முடியாத அளவில் அறையில் துர்நாற்றம் வீசியது.

இதனால் தனது படுக்கை மெத்தையை சந்தேகத்தின் பேரில் தூக்கி பார்த்த போது தினேஷூக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், உள்ளே இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது.

அந்த சடலமானது தினேஷின் கார் ஓட்டுனர் ராஜேஷ்குமாரின் மனைவி பபிதா (30) என்பவது தெரியவந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் பபிதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பபிதாவை அவரின் கணவர் ராஜேஷ்குமார் தான் கொலை செய்துள்ளார் என கருதுகிறோம்.

பபிதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவர் ராஜேஷ்குமாரை இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பபிதாவின் நடத்தையில் ராஜேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.

இதோடு கடந்த 5 நாட்களாக ராஜேஷ்குமார் மாயமாகியுள்ளார்.

அதாவது தினேஷ் ஊரில் இல்லாத சமயத்தில் அவர் அறை கதவை திறந்து தனது மனைவியை கொலை செய்துவிட்டு சடலத்தை ராஜேஷ்குமார், படுக்கைக்கு அடியில் வைத்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளார்.

இதனிடையில் தலைமறைவாக உள்ள ராஜேஷ்குமாரை தனிப்படை அமைத்து பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்