மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்து கொண்ட வாலிபர்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலுர் அருகே உள்ள தாரமங்கலம் ராமிரெட்டியப்பட்டி கிராமம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

இவருக்கு சீரங்கம்மாண் என்ற மனைவியும் 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இவரது மூத்த மகள் மாரியம்மாள் (18) பெண்கள் கல்லுரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் தாரமங்கலம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிவேல் (25) என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரியம்மாளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்துள்ளார்.

இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்ட நிலையில் பழனிவேலை பொலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்