வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவன்: மாமனாரால் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் மனைவியை அவரின் மாமனார், மாமியார் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்தீப் கவுர். இவருக்கும் ராஜ்விந்திரா என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது பணம், நகைகளை வரதட்சணையாக வாங்கிய குல்தீப், தான் இத்தாலிக்கு வேலைக்கு செல்ல மேலும் பணம் வேண்டும் என மனைவி ராஜ்விந்திராவை துன்புறுத்தி வந்தார்.

பின்னர் குல்தீப் இத்தாலிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அவரின் தாய் சசு, தந்தை சஷ்ரா மற்றும் சகோதரர் ஹப்பி ஆகியோர் ராஜ்விந்திராவிடம் கூடுதல் பணம் கேட்டு அடித்து துன்புறுத்த தொடங்கினர்.

அதாவது, வீட்டின் இருட்டறையில் ராஜ்விந்திராவை அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர்.

மேலும், கணவரிடம் போனில் பேசக்கூட ராஜ்விந்திராவுக்கு அனுமதி வழங்கப்படாததோடு அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொய்யாக கூறிவந்தனர்.

இதற்கெல்லாம் உச்சமாக சில நாட்களுக்கு முன்னர் ராஜ்விந்திராவை கொடூரமாக தாக்கி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் ராஜ்விந்திராவின் கணவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்