சட்டவிரோதமாக சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் கைது

Report Print Deepthi Deepthi in இந்தியா

இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் விழாவிற்காக பிரதமரின் வருகையையொட்டி மதுரை முழுவதும் பொலிசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமாக குழந்தையுடன் நின்று கொண்டிருந்த ஒரு தம்பதியை, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து சென்னைக்கு கள்ளத் தோணியில் வந்து, அங்கிருந்து மதுரை வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நகையை அடகுவைக்க தான், தெற்கு ஆவணி மூலவீதிக்கு வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியா வந்துள்ள அவர்கள், இலங்கை மகினம் பகுதியை சேர்ந்த ரிஷிகன் ரஸாக், அவரின் மனைவி அசிஸ் பாத்திமா மற்றும் குழந்தை அப்துல் ரஸக் அகமத் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்