மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல்: பிரதமர் மோடி இன்று வருகை

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

இன்று காலை 11:30 மணிக்கு மதுரை, மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அரசு மருத்துவ கல்லுாரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக மதுரை, தஞ்சாவூர் மற்றும் நெல்லை மருத்துவக்கல்லுாரிகளில், 450 கோடி ரூபாயில் பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவுகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். மதியம் 12:05 மணிக்கு மற்றொரு மேடையில் பா.ஜ., பொதுக் கூட்டத்தில், தேர்தல் பிரசாரத்தை மோடி துவக்குகிறார்.

அங்கிருந்து மதியம் 12:55 மணிக்கு விமான நிலையம் செல்லும் அவர் ஓய்விற்கு பின் மதியம் 1:55 மணிக்கு கொச்சி புறப்படுகிறார். இதையொட்டி டி.ஜி.பி ராஜேந்திரன் தலைமையில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரிங் ரோடு பகுதியில், காலை முதல் மதியம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதியில் 40 இடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்