ரஜினியின் பேட்ட படம் பார்க்க சென்ற நபருக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருப்பூர் மாவட்டத்தில் ரஜினியின் பேட்ட திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகண்ட பிரபு கடந்த 12-ம் திகதி திரையரங்கு ஒன்றில் பேட்ட படம் பார்க்க சென்றுள்ளார்.

அவர் தலையில் காயத்துடன் வீட்டிற்கு திரும்பிய நிலையில் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரையரங்கில் மணிகண்ட பிரபு அருகில் அமர்ந்திருந்த நபரை கண்டுபிடித்து பொலிசார் விசாரணை நடத்தினர். மணிகண்ட பிரபுவை, படம் பார்த்துக்கொண்டருந்தபோது மணிகண்ட பிரபு சிகரெட் பிடித்தாகவும், இதனை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவர் கட்டையால் அடித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதனால், வீடு திரும்பிய மணிகண்ட பிரபு உள்காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்