மனைவியை ஏமாற்றி காதலியுடன் ஓட்டம் பிடித்த கணவன்! கலெக்டரிடம் கதறி அழுத 3 குழந்தைகளின் தாய்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் என்னுடைய மூன்று குழந்தைகளையும் தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவரை மீட்டுத் தரும்படி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா. திருப்பூர் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சிலிங் பிரிவில் பணியாற்றி வரும் இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் அழுகுராஜாவிற்கும், அவர் பணியாற்றும் இடத்தில் இருக்கும் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு வந்துள்ளது. இதை அறிந்த அழுகுராஜாவின் மனைவி சாந்தி தனது கணவரை கண்டித்ததுடன், அந்த பெண்ணையும் எச்சரித்துள்ளார்.


இந்த விவகாரத்தால் சாந்தி மற்றும் அழகுராஜாவிற்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென்று அழகுராஜா சாந்தியின் நகை, பணம் மற்றும் சில சான்றிதழ்களை எடுத்துச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

தலைமறைவான இவர் குறித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டதாக கூறி, சாந்தி இதற்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் மூன்று குழந்தைகளையும் அழைத்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் என்னுடைய கணவனை மீட்டுத் தாருங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers