குடிபோதையில் மகன் செய்த செயல்: அடித்து கொன்ற தாய்..அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் குடிபோதையில் அடித்து உதைத்த மகனை கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் கருப்பையன் (40)

கருப்பையனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடிப்பழக்கம் உள்ள கருப்பையன், தினமும் மது அருந்திவிட்டு தனது பெற்றோர் மற்றும் மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கருப்பையனுடன் ஏற்பட்ட சண்டையால் மனைவி வேம்பரசி, பொங்கலன்று தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வழக்கம்போல் நேற்றிரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கருப்பையன், தனது பெற்றோரை அடித்து உதைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் மாரியம்மாள், மகனை கட்டையால் அடித்ததில், கருப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதன்பின்னர் காவல் நிலையத்துக்கு சென்ற மாரியம்மாள் என் மகனை அடித்தே கொன்றுவிட்டேன் என வாக்குமூலம் அளித்து சரணடைந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் கருப்பையன் உடலை கைப்பற்றி தொடர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers