தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்தை பார்த்து யார் என கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்தை பார்த்து யார் என கேட்ட இளைஞர் சந்தோஷ்குமார் துண்டறிக்கை விநியோகித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் போராட்டம் நடந்தபோது, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்து சிகிச்சைபெற்று வந்தவர்களை பார்ப்பதற்காக, நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது பண்டாரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ்ராஜ், நடிகர் ரஜினியை பார்த்து நீங்கள் யார்? என கேட்டதால், அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டார்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கல்லூரியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான துண்டறிக்கை கொடுத்ததாக சந்தோஷ்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டித்து பண்டாரம்பட்டி மக்கள், கோயில் முன் தர்ணாவில் ஈடுபட்டார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers