நான் வெளிநாட்டுக்கு செல்கிறேன்: ஒரு ஏழை மாணவனின் நெகிழ்ச்சி பகிர்வு

Report Print Deepthi Deepthi in இந்தியா

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற அரசு பள்ளி மாணவன் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது குறித்து பகிர்ந்துள்ளார்.

தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவர்களை, மேலை நாடுகளுக்கு வருடாவருடம் கல்விப் பயணம் அழைத்துச்செல்வது வாடிக்கை.

அந்த வகையில், தமிழகத்திலிருந்து 50 மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி 21-ல் சென்னையிலிருந்து புறப்பட்டு, பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

இதற்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற மாணவன் தெரிவாகியுள்ளான். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்க பெற்றோர் கூலி வேலை பார்த்துதான் என்னைப் படிக்க வைக்கிறாங்க.

நான் இதுவரை கரூர் மாவட்டத்தைத் தாண்டி போனதில்லை. ஆனா, இன்னைக்கு ஸ்வீடன், பின்லாந்து வரை செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

ஒரு விஞ்ஞானியாக வேண்டியதுதான் எனது லட்சியம். அதற்கான முதல் பயணம் தான் இந்த வெளிநாட்டு பயணம் என நெகிழ்ந்துள்ளார் சதீஷ்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers