ஆண்களை ஆச்சரியப்பட வைத்த இளம்பெண்! 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி அசத்திய வீடியோ

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் 110 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை இளம் பெண் ஒருவர் அசால்ட்டாக தூக்கியுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி உலகில் இருக்கும் தமிழர்கள் பொங்கல் திருநாளை வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் திருநாளின் இரண்டாம் நாளான இன்று மட்டுப் பொங்கல் என்பதால், மதுரையில் இருக்கும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

துள்ளி வரும் மாடுகளை இளைஞர்கள் தீரத்தால் இளைஞர்கள் அடக்கினர். அதே போன்று பொங்கல் திருநாளன்று பாரம்பரிய விளையாட்டான இளவட்ட கல் தூக்கும் போட்டி கிராமங்களில் அதிகளவில் நடைபெறும்.

அந்த வகையில் சென்னை தாம்பத்தில் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 11 ஆண்களும், 1 பெண் மட்டும் கலந்து கொண்டனர்.

சுமார் 110 கிலோ எடை கொண்ட கல்லை தூக்குவதற்கு இளைஞர்களே சிரமப்பட்டு தூக்கிய போது, ஒரு பெண்ணாக கலந்து கொண்ட, அவர் அசால்ட்டாக கல்லை தூக்கி கீழே போட்டு சென்றார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers