தங்கத்தால் செய்யப்பட்ட கரும்பு, பானை, தங்க மாடு: அசத்திய நபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.தேவன் என்ற நகைத்தொழிலாளி தங்கத்தில் கரும்பு, பானை செய்து அசத்தியுள்ளார்.

கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று கரும்பு, பானை, அடுப்பு, விறகு, காளை மாடு, கரண்டி ஆகியவற்றை தங்கத்தால் தத்ரூபமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

24 மணி நேர இடைவிடாத தொடர் முயற்சியால் இவற்றை உருவாக்கியதாக தேவன் தெரிவித்துள்ளார்.

1 கிராம் 900 மில்லி தங்கம் இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers