சிதைக்கப்பட்ட ரோஜா: நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம் குறித்து குற்றவாளியின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் தனியாக வீட்டில் இருந்த ரோஜா என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நரிக்குறவர் குடியிருப்பில் அருண்பாண்டியன் என்பவர் தன் மனைவி ரோஜா மற்றும் பெண் குழந்தை சுஜாதாவோடு வசித்து வந்தார். அவர் பாண்டிச்சேரி சென்றுவிட்ட நிலையில், பக்கத்து வீட்டுக்காரனான வீரா, நள்ளிரவில் வீடு புகுந்து ரோஜாவை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.

ரோஜா எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்திருக்கிறான். பிறகு, தாய் அருகில் படுத்திருந்த குழந்தை சுஜாதாவையும் கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் போய் படுத்துக்கொண்டான்.

பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது, பக்கத்தில் உள்ள வீராவின் வீட்டுக்கு மோப்ப நாய் சென்றுள்ளது.

விசாரணையில் வீரா பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நள்ளிரவு மிதமிஞ்சிய போதையில் இருந்தேன். உணர்ச்சிவசப்பட்டு ரோஜாவை சில்மிஷம் செய்தேன். அவர் மறுத்துவிட்டதால் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers