கட்டாயப்படுத்திய கணவன்: திருமணம் முடிந்த 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி

Report Print Vijay Amburore in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க கணவன் வற்புறுத்தியதால் இளம் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் எரங்குட்டாப்பள்ளியை சேர்ந்த ராதா (22) என்கிற இளம்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக லிங்காமையா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின்போது ராதாவின் பெற்றோர் வரதட்சணையாக இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக வாங்கி கொடுக்கமுடியவில்லை. இதனை காரணம் காட்டி ரூ.5 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கணவன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும், உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுமாறும் மனைவியை வற்புறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் வீடு திரும்பிய ராதா, நடந்தவை பற்றி தன்னுடைய தாயிடம் அழுதபடியே கூறிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்த அவருடைய தாய் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers