என் மகனுக்கு என்ன வியாதினு சொல்லுங்க டாக்டர்ஸ்! ஒவ்வொரு நாளும் நினைத்து கண்ணீர்விடும் தாய்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மகனுக்கு திடீரென்று இரண்டு கால்கள் செயல் இழந்து போனதால், அவரின் தாய் என் மகனுக்கு என்ன நோய் என்று மருத்துவர்களே சொல்ல மறுக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே, நல்லாடை, பகுதியைச் சேர்ந்த தம்பதி உமாகாந்தன்- பவானி.

இந்த தம்பதிக்கு தினேஷ் குமார் என்ற ஒரே மகன் உள்ளார். தினேஷ் அங்கிருக்கும் நல்லாடை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தினேஷை அவரது அம்மா தினமும் காலையில் மூன்று சக்கர வண்டியில் அமரவைத்து தள்ளிக்கொண்டு வந்து சுமார் 1.கி.மீற்றர் தூரம் பள்ளி வகுப்பறையில் விடுகிறார்.

அதன் பின் மீண்டும் அதே வண்டியிலேயே அமர்ந்து பயிலும் தினேஷ்குமாருக்கு மதியம் ஒரு முறை வந்து உணவூட்டுகிறார்.

பள்ளி முடிந்தவுடன் மாலை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இதனால் அவருடைய மகனுக்கு என்ன ஆனது என்பதை பிரபல தமிழ் ஊடகம் ஒன்று பவானியிடம் கேட்டுள்ளது.

அவர் கூறுகையில், என் மகன் கடந்த 2003-ஆம் ஆண்டு நன்றாகத் தான் பிறந்தான். மற்ற பிள்ளைகளைப் போன்று நன்றாக ஓடி ஆடி விளையாடினான்.

அப்போது தீடீரென்று ஒருநாள் அம்மா என்னால் நடக்க முடியவில்லை என்று கூறினான்.

இதை எங்களால் நம்பவே முடியவில்லை. இதனால் நாங்கள் அவனை தூக்கி நிறுத்தினோம். இருப்பினும் கீழே விழுந்துவிடுகிறான்.

கண்வர் தச்சு தொழில் செய்யும் கூலி வேலைக்காரர். எங்களுடைய சக்திக்கு மீறி மயிலாடுதுறை, காரைக்கால், பாண்டிச்சேரி, சென்னை என பல ஊர்களுக்கு மகனை அழைத்துச் சென்று பல மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டோம்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கொஞ்சம் தாமதமானாலும், விரைவில் சரியாகிவிடும் என்று கூறி மருத்து மாத்திரை மட்டும் கொடுக்கிறார்கள்.

ஆனால் என்ன வியாதி என்று கேட்ட சொல்ல மறுக்கிறார்கள். எங்களின் இந்த நிலையை அறிந்த ஒரு நாட்டு வைத்தியன், ஒரு மாதத்திற்குள் மகனை நடக்க வைப்பதாக கூறி 20,000 ரூபாய் வாங்கி ஏமாற்றிவிட்டான்.

எங்கள் கண் முன்னாடி விளையாடிய மகன் இப்படி இருக்கிறான் என்ற போது கண்ணீர் தான் வருகிறது. தினந்தோறும் அழுகாத நாட்கள் இல்லை.

படிப்பில் அவனுக்கு ஆர்வம் இருப்பதால் படிக்க வைக்கிறோம். இப்போதைக்கு அவனுக்கு நண்பன் என்றால் அது செல்போன் தான், மருத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் அவனுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது.

என்னிடம் படித்து சரியாக சொல்கிறான், அதுவே பள்ளிக் கூடம் சென்றுவிட்டால் மறந்துவிடுகிறான். இத்தனை மருத்துவமனைகளுக்கு சென்றும் என் பிள்ளைக்கு என்ன வியாதி? ஏன் இப்படி ஆனான்? மீண்டும் பழைய மாதிரி நடப்பானா? என்று மீண்டும் கண்கலங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers