14 வயது தமிழ் சிறுமியால் அவமானப்படுத்தப்பட்ட ராகுல்: ஒலித்த கைதட்டல்...நேரலையை நிறுத்திய பரிதாபம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி, முதல் முறையாக துபாய்-க்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார்.

அமீரக துணை அதிபரும், ஆட்சியாளருமான ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.

துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதில் இந்தியர்களிடையே உரை நிகழ்த்தினார். அதைக் கேட்க, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கூடி இருந்தனர் .

தனது பதில்களுக்கு இடையே பொதுமக்களை நோக்கி ஏதேனும் கேள்வி இருக்கிறதா என்று கேட்க நிறைய நபர்கள்முன்வந்த நிலையில் சிறுமியிடம் மைக்கை கொடுக்குமாறு ராகுல் சைகை காட்ட விழா ஏற்பாட்டாளர்கள் சிறுமியிடம் மைக்கை கொடுத்தனர்.

கேள்விகளால் துளைத்தெடுத்த 14 வயது தமிழ் சிறுமி

அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்த சிறுமி, ராகுலிடம் முதலில் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது… இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்று வந்தீர்கள் அதுவே காஷ்மீரில் நடந்தால் குல்லா அணிந்து கொள்கிறீர்கள் ஏன் என்று கேட்க ஒரு நிமிடம் ராகுல் அமைதியானர்.

ராகுல் காந்தியின் பதில் : அனைத்து மதத்தினரும் சமம் என்பதை நிரூபிக்கும் பொருட்டே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வருவதாகவும் ,விரைவில் சமத்துவமான இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.

சிறுமியின் மற்றொரு கேள்வி -இந்தியாவில் கடந்த கால ஆட்சியில் 80 % ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்களா என்றுகேட்க, ராகுல் என்னசெய்வதென்று தெரியாமல் ஆடிப்பானார்.

பதில் எதுவும் கூறாமல் சிரித்தபடியே நின்றிருந்தார். இதனைப்பார்த்த காங்கிரஸ் ஐடி பிரிவினர் நேரலையை நிறுத்தினர்.

மேலும் சிறுமி கூறியதாவது, இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் இனிமேலாவது தாங்களும் தங்கள் நண்பர்களும் மதவாதம் என்று சொல்லாமல் ஊழல் இல்லாத ஆட்சியை இனிமேலாவது தருவோம் என்று வாக்கு கேளுங்கள்.

இந்திய மக்கள் சிந்திப்பார்கள் என்று தெரிவிக்க அரங்கில் கை தட்டல் ஒழிக்க ஆரம்பித்தது.

ராகுலிடம் துணிவாக கேள்வி கேட்ட சிறுமியை பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers