பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட சிறுமி... தோழியையும் சிக்க வைத்த கொடுமை: அம்பலமான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் விபச்சார வழக்கில் சிக்கி தண்டனைக்குள்ளான 16 பேர் கொண்ட கும்பலை சிக்க வைத்த சிறுமிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டடத்தில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த 16 பேர் கொண்ட கும்பலுக்கு கடந்த 4-ஆம் திகதி மகளிர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் குறித்த கும்பலை சிக்கவைத்து தண்டனையும் பெற்றுத்தந்த இரு சிறுமிகள் தொடர்பில் நெஞ்சை உலுக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்த 2014 ஆம் ஆண்டு, அப்போது 13 வயதான கீதா என்ற சிறுமிக்கு சாலை ஓரத்தில் இட்டலி கடை வைத்திருக்கும் தனலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒருநாள் தனலட்சுமியின் குடியிருப்புக்கு சென்ற கீதா அங்கு ஆண் ஒருவருடன் தனலட்சுமி உறவில் ஈடுபடுவதை கண்டுள்ளார்.

கீதா அங்கு நடந்த சம்பவத்தை கண்டதை உறுதி செய்த தனலட்சுமியும் அந்த நபரும் அங்கிருந்து மாயமான கீதாவை துரத்தி சென்று பிடித்துள்ளனர்.

பின்னர் தனலட்சுமியின் கண்முன்னே அந்த நபர் சிறுமி கீதாவை துஸ்பிரயோகம் செய்துள்ளார், மட்டுமின்றி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து, சிறுமி கீதாவை வெளியே செல்ல அனுமதிக்காத தனலட்சுமி அவருக்கு சுவையான உணவுகளை வரவழைத்து தந்துள்ளார்.

வாழ்க்கையில் முதன் முறையாக நாள்தோறும் அறுசுவை உணவு கிடைத்த மகிழ்ச்சியில், கீதாவும் நடந்தவற்றை வெளியே செல்லாமல் மறைத்துள்ளார்.

மட்டுமின்றி, பாடசாலைக்கு சென்று திரும்பும் கீதா பாலியல் தொழிலிலும் ஈடுபட வைக்கப்பட்டார். சில மாதங்கள் கடந்த நிலையில் ஒருநாள் தம்மால் முடியாது என மறுப்பு கூறிய கீதாவுக்கு, இன்னொரு சிறுமியை அழைத்து வந்தால் கீதாவை விடுவிப்பதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து கீதா தமது தோழியான 14 வயது லதாவை தனலட்சுமிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆனால் தனலட்சுமி கும்பல் கீதாவையும் லதாவையும் மிரட்டி மீண்டும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியுள்ளனர். மட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் பணவும் அளித்து வந்தனர்.

இதனால் இருவரும் அமைதியாகியுள்ளனர். ஒருகட்டத்தில் தனலட்சுமியிடம் இருந்து இரு சிறுமிகளையும் கடத்திய கும்பல் ஒன்று பல வாடிக்கையாளர்களுக்கு விருந்து வைத்துள்ளது.

இதனிடையே லதாவை காணவில்லை என அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் துப்புத்துலங்காமல் திணறினர்.

இந்த நிலையில் அந்த பாலியல் கும்பலிடம் இருந்து தப்பிய இரு சிறுமிகளும் தங்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடவைத்த அந்த கும்பலுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையில் போராடி தற்போது 16 பேருக்கு தண்டனை வாங்கித் தந்துள்ளனர்.

இதில் 30 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஒருவர் கிறிஸ்தவ பாதிரியார். இவரிடம் இரண்டு நாட்கள் சிக்கிய சிறுமிகள் இருவரும் அந்த பாதிரியாரால் பலமுறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்