இளம் மனைவியின் கழுத்தை அறுத்த காதலன்: அலறல் சத்தம் கேட்டு பதறிய உறவினர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

கோவை மாவட்டத்தில் அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை, கணவன் அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன்(27). இவர் சுகந்தி (23) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையில் நேற்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சரவணன் திடீரென கத்தியை கொண்டு மனைவியின் வாய்பகுதியை அறுத்துள்ளார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு வேகமாக ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சுகந்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சரவணனை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் போது, சுகந்தி கணவருக்கு தெரியாமல் அதிகளவில் கடன் வாங்கியதும், அதிகமாக செல்போனில் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்