அபாய கட்டத்தில் மணமக்கள்.. மருத்துவமனையில் நடந்த திருமணம்! கண்ணீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தெலங்கானாவில் தங்கள் காதலுக்கு குடும்பத்தார் முட்டுக்கட்டை போட்டதால் மனமுடைந்த இளம் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயல மருத்துவமனையில் அவர்களின் திருமணம் நடந்தது.

விகாராபாத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி (20). இவர் தனது உறவினரான நவாஸை (24) காதலித்து வந்தார்.

இவர்கள் திரும்பணத்துக்கு இருவீட்டாரும் ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையில் ரேஷ்மி வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த ரேஷ்மி பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குவந்த அவரது காதலர் நவாஸ் தனது காதலியின் நிலையைக் கண்டு மனமுடைந்து அவரும் விஷமருந்தினார். அவரையும் உடனே சிகிச்சைக்கு உட்படுத்தினர்.

இருவீட்டாருமே ரேஷ்மி - நவாஸ் காதலை பிரிக்க முடியாது என உணர்ந்து திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்ட இருவரின் திருமணமும் மருத்துவமனையிலேயே நடந்தது.

முஸ்லிம் முறைப்படி நடந்த திருமணத்தில் மணப்பெண்ணும் மணமகனும் கையில் குளுகோஸ் ஏற்றும் ஐவிஎஃப் நீடிலுடன் காட்சியளித்தாலும் காதல் கைகூடியது.

ஆனால், இருவரின் உடல்நிலையும் இன்னும் அபாய கட்டத்தை தாண்டாத நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்