கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி எடுத்த சோக முடிவு: அனாதையான 3 பிள்ளைகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அருளழகன் - சத்யா தம்பதியினருக்கு காவியா (10), அட்சயா (5), அகிலன் (2) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அருளழகன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவன் இறந்ததிலிருந்தே சத்யா மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அரளிவிதையை அரைத்து அவரும் சாப்பிட்டுவிட்டு தன் குழந்தைகள் காவியா (10), அட்சயா (5), அகிலன் (2) ஆகியோருக்குக் கொடுத்துள்ளார்.

நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சத்யா சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். மூன்று குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers