மூன்று மாதத்திற்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்தேன்! இப்படி நடந்துவிட்டதே என கதறும் இளம்பெண்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த இளம் பெண்ணுக்கு உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர், சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த 2-ஆம் திகதி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், நான், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிரஞ்சீவி முதல் மாதம் சம்பளம் கொடுத்துவிட்டு, அதன் பின் இரண்டு மாத சம்பளம் கொடுக்கவில்லை.

இது குறித்து நான் அவரிடம் கேட்ட போது, அவருடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகள் வேறுவிதமாக இருந்தது.

அதுமட்டுமின்றி தன்னிடம் தவறாகவும் நடக்க முயன்றார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து புகார் கொடுத்த காமாட்சியிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, அவர், தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

அதன் பின் பொலிசார் உரிமையாளர் சிரஞ்சீவியை தேடினர். பொலிசார் தேடுவதை அறிந்த அவர் பொலிசாரிடம் சிக்காமல் இருப்பதற்கு தலைமறைவாக இருந்துள்ளார்.

இருப்பினும் பொலிசார் தங்களுடைய தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அவர் சிக்கினார். இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்த காமாட்சியின் குடும்ப சூழ்நிலையைத் தெரிந்துகொண்ட சிரஞ்சீவி அவரிடம் நட்பாகப் பழகியுள்ளார்.

அதன் பின் அவரின் நடவடிக்கையில் சந்தேகத்தைக் கண்ட காமாட்சி, வேலையைவிட்டு நிற்க முடிவு செய்துள்ளார்.

இதை அறிந்து கொண்ட சிரஞ்சீவி அவருக்கு இரண்டு மாத சம்பளம் கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளார்.

சம்பளம் கேட்ட காமாட்சியிடம் தான் அவர் அத்துமீறி நடந்துள்ளார். காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் சிரஞ்சீவியை கைது செய்துள்ளோம்.

சிரஞ்சீவி குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers