தகாத உறவை தட்டிக்கேட்ட அம்மாவை எரித்து கொன்ற மகள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து மகளே தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் சானிடோரியத்தைச் சேர்ந்தவர் பூபதி(60). இவர் கடந்த 7-ஆம் திகதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தானாக தீப்பற்றி எரிந்ததாக, அவரது இளையமகள் நந்தினி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து பூபதி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அவர்களுக்கு பூபதி மீது எப்படி தானாக தீப்பற்றிருக்க முடியும்? அதற்கு என்ன காரணம்? என்பதில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால் நந்தினியிடம் பொலிசார் தங்களுடைய கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின் அவரது நடவடிக்கைகளை பொலிசார் தொடர்ந்து கண்காணித்து வந்த போது, பொலிசாருக்கு சில அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளது.

ஏற்கனவே திருமணம் ஆன நந்தினிக்கு திருநீர்மலையை சேர்ந்த முருகன் என்பவருடன் தவறான உறவு ஏற்பட்டதால் இதை அறிந்த பூபதி, நந்தினியை கண்டித்துள்ளார்.

இதன் காரணமாக தாயை காதலன் முருகனுடன் சேர்த்து தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அதன் படி முருகனுடன் சேர்ந்து நந்தினி தமது தாயின் உடலில் தீவைத்து கொளுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து நந்தினி மற்றும் முருகனை பொலிசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்