திரும்பிச் செல்: விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவுகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தி தெரியாத காரணத்தால், மும்பை விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவமதித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவருக்கு ஆதவுகள் குவிந்து வருகின்றன.

மதுரையைச் சேர்ந்தவர் ஆபிரகாம் சாமுவேல் (27). இவர் அமெரிக்காவில் உள்ள கிளார்க்சன் பல்கலைக்கழகத் தில் வேதியியல் பிரிவில் பி.ஹெச்டி படித்து வருகிறார்.

விடுமுறைக்காக மதுரை சென்றிருந்த அவர், மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத் துக்கு கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு வந்துள்ளார்.

பின்னர், விசா பெறுவதற் காக அங்குள்ள 33-வது கவுன்ட் டருக்கு சென்ற ஆபிரகாம் சாமுவேல், அங்கிருந்த குடியுரிமை அதிகாரியிடம் விசா தொடர்பான விவரங்களை ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி, சாமுவேலிடம் இந்தியில் பதிலளித்துள்ளார். அப்போது, தனக்கு இந்தி தெரியாது எனக் கூறிய சாமுவேல், ஆங்கிலத்தில் பேசுமாறு அதிகாரியை பணித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் குடியுரிமை அதிகாரி, "இந்தி தெரியாவிட்டால் தமிழகத்துக்கே திரும்பிச் செல்" என சாமுவேலிடம் கூறி யுள்ளார். மேலும், அவருக்கு விசா வழங்கவும் மறுத்துள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அங்கிருந்த குடியுரிமை உயரதிகாரிகளிடம் சாமுவேல் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு உடனடி யாக விசா வழங்கப்பட்டு விமானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற சாமுவேல், தனக்கு நேர்ந்த இந்த அவமானம் குறித்து ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகளை நேற்று வெளியிட்டார். மேலும், அந்தப் பதிவுகளை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந் தப்பட்ட குடியுரிமை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சாமுவேலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. குறிப்பாக அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப்பதிவில், ``நான் இந்தியன். எனக்கும் இந்தி பேச தெரியாது" என்று பதிவிட்டுள்ளார். அதோடு ஆபிரஹாம் சாமுவேல் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட செய்தியையும் கனிமொழி பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்