இந்து கோவிலில் பூஜை நடத்திய முஸ்லிம் அமைச்சர்

Report Print Gokulan Gokulan in இந்தியா

சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுபான்மை துறை அமைச்சராக பதவி ஏற்று கொண்ட ஷாலே முகமத் கோவில் பூஜை செய்துள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட ஷாலே முகமத், இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றாலும் தனது தொகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பூஜை நடத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் கடவுளுக்கு சாதிகளும் மதங்களும் இல்லை, இந்து முஸ்லீம் என்று அனைவரும் சகோதரர்கள்தான். தனிபட்ட நம்பிக்கை காரணமாகவே இங்கு வாழிபாடு செய்கிறேன் என்று கூறினார்.

அக்கோவில் பூசாரி கூறுகையில், அவர் இங்கு வழிபாடு நடத்துவது முதல் முறை கிடையாது, கோவிலுக்கும் அவருக்கும் அதிக தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்