5 வயது மகனை மது வாங்குவதற்கு அழைத்துச் சென்ற தந்தை! அதன் பின் சிசிடிவியில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு 5 வயது மகனை அழைத்துச் சென்ற போது, சிறுவன் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டதால், இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சேந்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் குமரபிரசாத். இவர் தன்னுடைய 5 வயது மகனுடன் சென்று, ஒரகடம் அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கி சாலையிலேயே குடித்து உள்ளார்.

அப்போது போதை தலைக்கேறியதால், இவர் சாலையிலே படுத்து உறங்கியுள்ளார். இதனைக் கண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சிறுவனை கடத்திச் சென்றுள்ளார்.

வெளியில் சென்ற கணவன் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால் சந்தேகமடைந்த அவரின் மனைவி முருகம்மாள், மகனையும், கணவனையும் தேடிச் சென்றுள்ளார்.

அப்போது கணவன் அங்கிருக்கும் டாஸ்மாக் கடை முன்பு மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்டு, மகனை எங்கே என்று கேட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு போதை அதிகமாகியதால், சரிவர கூறாமல் இருந்துள்ளார். அதன் பின்னரே அவர் மகன் கடத்தப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்து அருகில் இருக்கும் ஒரகடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் அங்கு பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவைப் பார்த்த போது, சிறுவனை அடையாளம் தெரியாத நபர் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இதைக் கேட்டு மனைவி முருகம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers