அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழகத்தில் சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் உறவினர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் பல உள்ளன. இதில் தங்க விரும்புவோர் ஆலய நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தங்கலாம்.

இந்நிலையில் நேற்று ஒரு அறையிலிருந்து கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை அடுத்து அந்த அறையில் பொறுப்பாளர் திறந்து பார்த்த போது ஒரு சிறுமியின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து ஆலய நிர்வாகம் சார்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த பொலிசார், விசாரணை மேற்கொண்டதில் கடந்த 28ஆம் திகதி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர் தனது பெரியப்பா கோபாலகிருஷ்ணன் மற்றும் மகள்கள் மகாலட்சுமி (வயது 6) ஸ்ரீலட்சுமி (வயது2) ஆகியோருடன் அறை எடுத்து தங்கி இருந்ததும் 30ஆம் தேதி அறையை காலி செய்துவிட்டு சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

மேலும் மகாலட்சுமி தலையணையால் அழுத்தி கொல்லப்பட்டிருக்கிறார் என்று சோதனையில் தெரியவந்தது.

தொடர்ந்து இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தி இருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தடையங்களை ஆராய்ந்து வந்தனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஜெயந்தி, அவரது பெரியப்பா கோபாலகிருஷ்ணன், மகள் ஸ்ரீலட்சுமியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலை குறித்து காரணம் தெரியாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers