வெளியில் சொன்னால் கொன்று விடுவேன்.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர்(36). இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தனது மனைவியுடனான தகராறு காரணமாக சங்கர் தனது தாயுடன் மற்றொரு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சங்கரின் மனைவி இரண்டு வயது மகளை அழைத்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்னர், வீட்டில் இருந்த 2வது மகளை கடைக்கு அனுப்பிய சங்கர், தனது மூத்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சங்கர் மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த தாயிடம் குறித்த சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவளது தாய், உடனடியாக செஞ்சி காவல்நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார்.

பின்னர் சங்கரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிசார், அவரை தேடி வந்த நிலையில் இன்று அதிகாலையில் கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers