5 திருமணம்... நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம்பிடித்த நபர்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டு காதலியுடன் ஓட்டம்பிடித்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கலின் தென்னம்பட்டியை சேர்ந்தவர் முருகன், இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இருவருக்கும் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார், எனினும் ராதாவை முருகனின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் ராதா மீண்டும் கர்ப்பமானார், இதற்கிடையே அடிக்கடி இருவருக்கும் தகராறு வந்தது.

சில நாட்களுக்கு முன் முருகன் காணாமல் போக, அக்கம்பக்கத்தில் ராதா விசாரித்துள்ளார்.

அப்போது முருகனுக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் நடந்துள்ளதாகவும், தற்போது கூட வேறொரு பெண்ணுடன் ஓடிப்போய் விட்டதாகவும் கூறியுள்ளனர்.

முருகனின் பெற்றோரும் ராதாவை துரத்தி விட்டதால், மண்டபத்தில் வசித்து வரும் ராதா வடமதுரை பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தலைமறைவான முருகனை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers