இறுதி சடங்கு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் வாழ்க்கையின் இறுதி நாளான சோகம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் கண்டெய்னர் லாரி மோதி கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொளத்தூரில் சாதிக் அலியின் உறவினர் இறந்துள்ளார்.

காரிய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சாதிக் அலி தன்னுடைய மனைவி பர்வீன் (35), எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் மகன் மாபூப் பாஷா (15) மற்றும் தந்தை அன்வர் (70), தாயார் அவாமாபி (65), பெரிய மாமனார் அகமது பாஷா (60) ஆகிய 5 பேரையும் இன்று ஆரணிக்கு காரில் அழைத்துச் சென்றார்.

வேலூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையோரமுள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து அதிவேகத்தில் வெளியே வந்த டிரெய்லர் லாரி ஒன்று, திடீரென எதிர்புறமாக திரும்பியது. கண் இமைக்கும் நேரத்தில் டிரெய்லர் லாரியில் கார் மோதி உருக்குலைந்தது.

காரில் இருந்த சாதிக் அலி உட்பட அவரின் குடும்பத்தினர் 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

சுமார் 2 மணி நேரம் போராடி நொறுங்கிய காருக்குள் கிடந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers