ஒரே நாளில் குடும்பத்தில் இரண்டு மரணம்.. மாரடைப்பால் இறந்த தாய்..வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சாலை விபத்தில் மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் அவர் தாய் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி (27).

அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (28).

இவரும் ராஜபாண்டியும் சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக உள்ளனர். திருமண விழாவில் பங்கேற்பதற்காக 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.

நேற்று 2 பேரும் பைக்கில் மதுரை சென்று திருமண விழாவில் பங்கேற்றனர். பின்னர் ஊர் திரும்பிய போது பைக்கானது நிலை தடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. அதே வேகத்தில் எதிர் திசையில் வந்த காரின் மீதும் மோதியது.

இந்த விபத்தில் ராஜபாண்டியும், தினேஷும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாண்டியின் தாயார் அங்கம்மாள் (63) அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

பின்னர் சோகத்தில் இருந்த அவருக்கு நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers