கணவனை இழந்த பின் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கெளசல்யா: நடிகை சொர்ணமால்யா அதிரடி கருத்து

Report Print Raju Raju in இந்தியா

ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கெளசல்யா, இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து நடிகை சொர்ணமால்யா கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கெளசல்யா, பறை இசை கலைஞரான சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.

இது குறித்து பேசிய நடிகையும், தொகுப்பாளியுமான சொர்ணமால்யா, கெளசல்யா மறுமணம் செய்து கொண்டார் என்பது நீதிமன்றத்தில் சிறந்த தீர்ப்பு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி போன்றது.

தனக்கு நேர்ந்த மிகப்பெரிய கொடுமையை தைரியமாக எதிர்கொண்டு, மக்கள் ஆதரவோடு தனது வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்ய முடியும் என்று காட்டியிருக்கிறார்.

அவரின் மறுமணம பலருக்கு நம்பிக்கையை அளிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers