வெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த கணவன்: மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவன், இரண்டாவதாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டது முதல் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் யமுனா நகரை சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவருக்கும் மனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2005-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் ஹரிஸ்குமார், பஹரைன் நாட்டுக்கு பணிக்கு சென்றார்.

இதன்பின்னர் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து மனைவியை பார்த்து சென்ற ஹரிஸ்குமார் சில காலம் கழித்து மனைவியை பார்ப்பதையோ, போனில் பேசுவதையோ குறைத்து கொண்டார்.

இதனால் கணவன் மீது சந்தேகமடைந்த மனிஷா இது குறித்து விசாரித்தார்.

அப்போது ஹரிஸ்குமார், தனக்கு திருமணமாகவில்லை என பொய் கூறி ஷில்பா என்ற பெண்ணை கடந்த 2016-ல் இந்தியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

சமீபத்தில் தனது இரண்டாவது மனைவியுடன் இந்தியாவுக்கு ஹரிஸ்குமார் வந்துள்ளார்.

இதையறிந்த மனிஷா அதிர்ச்சியடைந்தார். ஆனால் வந்த உடனேயே மீண்டும் இரண்டாவது மனைவி ஷில்பா மற்றும் அவர் குடும்பத்தாருடன் ஹரிஸ்குமார் பஹரைனுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது கணவர் ஹரிஸ்குமார், ஷில்பா மற்றும் அவர் குடும்பத்தார் ஐந்து பேர் மீது மனிஷா பொலிஸ் புகார் அளித்துள்ளார்.

புகாரில், என்னை விவாகரத்து செய்யாமல் ஷில்பாவை ஹரிஸ்குமார் மணந்தது தவறு, இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers