கடத்தப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் 2வது மனைவிக்கு என்ன ஆனது? வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் இரண்டாவது மனைவி ஜூலி ஊட்டியில் கடத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து, சினிமா நடிகர் ஆனவர் சீனிவாசன்.

கடன் வாங்கித் தருவதாக பலரிடம் வாக்குறுதி கொடுத்து பல கோடி ஏமாற்றியதாக இவர் மீது பல வழக்கு உள்ளது, அடிக்கடி ஜெயிலுக்கும் போவார், படங்களில் நடிக்கவும் செய்வார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசனின் மனைவி ஜூலி, தனது கணவரை காணவில்லை என்று பொலிசில் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, சீனிவாசன் தான் ஊட்டிக்கு வந்திருப்பதாகவும், நிலபத்திர பதிவு செய்ய வேண்டியதன் காரணமாக வந்திருப்பதாகவும் பொலிசுக்கு தெரிவித்திருக்கிறார். மனைவி ஜூலியும் தன்னுடன் தான் இருக்கிறார் என்றும் கூறினார்.

இந்த நிலையில் சீனிவாசன் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பினார். மேலும் தனது மனைவி ஜூலியை கடத்தி ஊட்டியில் 11 பேர் சிறை வைத்துள்ளதாக பொலிசாரிடம் புகார் கூறியுள்ளார் சீனிவாசன்.

இவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஊட்டியில் இருந்த ஜூலியை மீட்டதோடு, இது தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers