மகள் திருமணத்திற்கு 100 விமானங்கள், 1000 கார்கள்! வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தன் மகள் திருமணத்திற்கு வாடகைக்கு எடுத்த விமானங்கள் மற்றும் கார்களின் வாடகை மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் உடைப்பூரில் இருக்கும் லேக் அரண்மனையில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் கடந்த 8-ஆம் திகதியிலிருந்து 9-ஆம் திகதி வரை கோலகலமாக நடைபெற்றது.

இஷாவுக்கும் தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுவுக்கும் வரும் 12-ஆம் திகதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கள், அரசியல்கட்சித்தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் வந்திருந்தனர்.

குறிப்பாக அமெரிக்காவில் இருந்து ஹிலாரி கிளிண்டன் போன்றோரும் வந்திருந்தனர். இதனால் அம்பானி மகள் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இதற்கிடையில் கடந்த 8-ஆம் திகதி ராஜஸ்தானில் ஓட்டுப்பதிவு முடிவடைந்ததால், மும்பையில் இருந்து அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தினர் தனி விமானங்களில் உதய்பூர் வந்தடைந்தனர்.

இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் உதய்பூர் செல்ல 80 முதல் 100 தனியார் விமானங்களை அம்பானி மொத்தமாக குத்தைக்கு எடுத்தார்.

சாதண நாட்களில் உதய்பூர் விமான நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. நாள் ஒன்றிற்கு 19 லேண்டிங் மற்றும் 19 டேக் ஆப் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அம்பானி குடும்பத்தினரின் வருகையால், அடுத்த 5 நாட்களுக்குத் தனியார் விமானங்கள் 200 முறை டேக் ஆப் மற்றும் 200 லேண்டிங் செய்யும் வகையில் அட்டவணை போடப்பட்டுள்ளது.

இது மட்டுமா மகளின் திருமணத்துக்கு உலகின் பல நாடுகளில் இருந்து வரும் 1000 சிறப்பு விருந்தினர்கள் வர இருப்பதால் உதய்பூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வருவது, ஹோட்டலில் இருந்து இஷாவின் வைபவ நிகழ்சிகளுக்கு வருவது போன்ற சாலை போக்குவரத்து சேவைகளுக்கு சுமார் 1000 கார்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அந்த கார்கள் எல்லாம் சாதரண கார்கள் கிடையாது. விலையுயர்ந்த ஆடி, பிஎம்டபில்யூ, ஜாகுவார் போன்ற கார்கள் தானாம்.

இந்த கார்களுக்கு மட்டும் வாடகை 250 கோடி என்று மும்பையில் இருக்கும் ஊள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மகளின் திருமண பத்திரிக்கை ஒன்றை 3 லட்சத்திற்கு அடித்த அவருக்கு இது எல்லாம் சாதரணம் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers