இறந்தது போல் நாடகமாடிய தொழிலதிபர்: விசாரணையில் அம்பலமான சதித் திட்டம்

Report Print Arbin Arbin in இந்தியா

காப்பீட்டு பணத்துக்காக இறந்தது போல் நாடகமாடிய தொழிலதிபரை பொலிசார் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் சண்டிகரில் நிகழ்ந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் ஆகாஷ் என்பவரை அப்பகுதி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஹரியானா பொலிசார் இணைந்து கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர், நஹான் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், அவரிடம் வேலை செய்தவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக நவம்பர் மாதம் 20-ம் திகதி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற பொலிசார், அங்கு ஒரு கார் தீபிடித்து எரிந்த நிலையில் இருந்ததை கண்டுள்ளனர்.

மட்டுமின்றி அந்த கார் முற்றிலும் எரிந்து சாம்பல் மட்டுமே மிஞ்சியிருந்தது. அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே கொலை நடந்த அடுத்த நாள் தடயவியல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர்.

அதே நாளில் ஆகாஷின் குடும்பத்தினர் அவரது இறப்புச் சான்றிதழ் வேண்டும் என பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்தனர்.

ஆகாஷ் இறந்த பிறகு அவரது மருமகன் ரவி குமார் சிறிது நாள்களாக ஊரில் இல்லை. அதனால் அவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் கடந்த 3-ம் திகதி ரவி குமார், நஹான் நகருக்கு வந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக அவரை விசாரணைக்காக பொலிசார் அழைத்துள்ளனர். அதில், ஆகாஷ், காப்பீட்டு பணத்துக்காக ரவியுடன் இணைந்து தன் காரை தானே எரித்துவிட்டு நாடகமாடியுள்ளதாகவும், பிறகு சண்டிகரிலிருந்து தப்பி ஹரியானா சென்றுள்ளதாகவும் ரவி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்