அம்பலமான சஞ்சீவின் லீலைகள்! வீடியோவை பார்த்து அதிர்ந்த பெண்கள்- பொலிசார் சொன்னது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதி நடத்திய சஞ்சீவின் ரகசிய கேமராக்களில் சிக்கிய பெண்களிடம் வீடியோவை மறந்துவிடுங்கள் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

ஆதம்பாக்கத்தில் செயல்பட்ட பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தியதாக இன்ஜினீயர் சஞ்சீவ்வை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக 9 ரகசிய கேமராக்களை பறிமுதல் செய்தோம். அதில் பதிவாகியிருந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தோம். அந்த வீடியோக்களைப் பார்க்க விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனுமதி கேட்டனர்.

உயரதிகாரிகளின் அனுமதி பெற்று வீடியோக்களை பார்க்க பெண்களை அனுமதித்தோம். அப்போது, மிகுந்த பதற்றத்துடன் அவர்கள் இருந்தனர். அவர்களுக்கு பெண் பொலிசார் ஆறுதல் கூறினர்.

ரகசிய கேமராக்களில் இருந்த வீடியோக்களைப் பார்த்தபிறகு சம்பந்தப்பட்ட பெண்கள் நிம்மதியடைந்தனர். அந்த சமயத்தில் சில பெண்கள் அதிர்ச்சியும் ஆவேசமாகினர். அவர்களை சமாதானப்படுத்தினோம்.

வீடியோக்களைப் பார்த்தபிறகு அதில் இடம்பெற்ற காட்சிகளை அழித்துவிடுங்கள் என்று பெண்கள் கூறினர். அப்போது `இந்த வீடியோக்களை நீங்கள் மறந்துவிடுங்கள், நிம்மதியாகச் செல்லுங்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நாங்கள் பொறுப்பு என்று நம்பிக்கையூட்டும் வகையில் அவர்களிடம் பேசினோம் என கூறியுள்ளனர்.

ரகசிய கேமரா பொருத்தப்பட்ட விடுதியில் தங்கியிருந்த பெண்களின் எதிர்காலம் கருதி அவர்களின் விவரங்களை பொலிசார் வெளியில் தெரிவிக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு பொலிசார் பெண்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்