வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதியினர்! வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னை ஆவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக இளம்தம்பதியினரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை ஆவடி அருகே வீடு ஒன்றில் கடந்த 28-ம் தேதி, வயதான தம்பதியினர் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

அவர்களை பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர் ஜகதீசன் (68) மற்றும் அவரது மனைவி விஷாலினி (61) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்களுடைய வீட்டில் இருந்து ரத்தக்கறையுடன் ஒரு இரும்பு கம்பி கண்டறியப்பட்டது. வீட்டிலிருந்த 50 சவரன் தங்கநகைகளும் காணாமல் போயிருந்ததால், நகைக்காக செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த பொலிஸார், தற்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக இளம் தம்பதியினரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் சுரேஷ் குமார் மற்றும் அவரது மனைவி Bhulakshmi, ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்கள் எனவும், இருவர் மீதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்கும் படியும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்