தூக்கில் தொங்கிய மாணவி: கை முழுவதும் எழுதப்பட்டிருந்த மரண வாக்குமூலம்

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கை முழுவதும் மரண வாக்குமூலத்தை எழுதிவைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இந்தர்புரி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் டெசி என்ற மாணவி இன்று அதிகாலை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் டெசியின் உடலை கைப்பற்றியபோது, அவருடைய கை முழுவதும் மரண வாக்குமூலம் எழுதப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதில், கடந்த மூன்று மாதங்களாக உயிரியல் பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவர் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.மேலும், தான் இனிமேல் பள்ளி சொல்லப்போவதில்லை எனவும் அதில் எழுதியிருக்கிறார்.

பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பொலிஸார் மாணவி குறித்து மேற்கொண்ட விசாரணையில், நான் தீவிரமான ஒரு முடிவெடுத்துவிட்டேன் என தன்னுடைய பள்ளி தோழிகளிடம் ஏற்கனவே டெசி கூறியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்