மனைவிக்கு தெரிந்து நடந்த லீலைகள்: பெண்களின் குளியல் காட்சியை விடிய விடிய ரசித்தேன்: அதிர வைத்த வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தி, பெண்களின் குளியல் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை அணுஅணுவாக ரசித்து பார்த்ததாக கைது செய்யப்பட்ட விடுதி உரிமையாளர் பொலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 1வது தெருவில் உள்ள இரண்டு அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில், திருச்சியை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் பெண்கள் விடுதி நடத்தி வந்தார்.

இந்த விடுதியில் ஐடி நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 10க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், விடுதியில் குளியலறை, படுக்கையறை என 16 இடங்களில் ரகசியமாக கேமராக்கள் பொருத்தப்பட்டடு கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் ரகசிய கேமராவுடன் புகார் அளித்தனர்.

அதன்படி, பொலிசார் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர் சஞ்சீவின் அஸ்தினாபுரம் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது ஏராளமான செல்போன்கள், லேப்டாப், கணினிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், விடுதியில் தங்கியுள்ள இளம்பெண்களின் குளியல் காட்சிகள் மற்றும் உடை மாற்றும் காட்சிகள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.

பிறகு உரிமையாளர் சஞ்சீவை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர், சஞ்சீவ் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது, ஓட்டல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்த சஞ்சீவ் பெண்கள் விஷயத்தில் மிகவும் பலவீனமாக இருந்துள்ளார்.

பெண்கள் விடுதி நடத்தினால் எல்லாமே நேரடியாக பார்க்க முடியும் என்று அவரது நண்பர்கள் சஞ்சீவுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். அதன்படிதான் ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து எந்த அனுமதியும் பெறாமல் பெண்கள் விடுதி தொடங்கியுள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் போது நண்பர்களுடன் சேர்ந்து பெங்களூரு, மும்பை என பல இடங்களில் உல்லாசத்திற்காகவே லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்துள்ளார்.

இதனாலேயே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளை சரி செய்யவே அவர் நிலங்களை வாங்கி விற்பனை செய்ததில் பல லட்சம் மோசடி செய்து சிக்கி கொண்டார்.

இரவு நேரங்களில் தனது செல்போனில் ஆபாச இணையதளங்களில் குளியல் மற்றும் லெஸ்பியன் காட்சிகளை தான் விரும்பி பார்த்து வந்துள்ளார். இதை அவரது மனைவி பலமுறை கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை.

ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையான சஞ்சீவ், பெண்கள் விடுதி நடத்தினால் எல்லாமே நேரடியாக பார்க்க முடியும் என்பதால் விடுதியை ஆரம்பித்து இப்படி கேமராக்களை வைத்துள்ளார்.

ரகசிய கேமராக்கள் பொருத்திய விவகாரம் அவரது மனைவிக்கு தெரிந்துள்ளது. இருந்தாலும் கணவர் முடிவை அவரால் தடுக்க முடியவில்லை.

விடுதியில் ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்க்கவே சஞ்சீவ், விடுதியில் தனக்கு என உள்ள தனி அறைக்கு தினமும் காலை 10 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கு சென்று விடுவார்.

பிறகு இரவு 8 மணிக்கு வந்து இரவு 11 மணி வரைக்கும் அவருக்கான அறையில் இருந்து அனைத்து வீடியோக்களையும் பார்த்து விட்டு வீட்டிற்கு செல்வார்.

இப்படி கடந்த 2 மாதங்களாக இளம்பெண்களின் குளியல் காட்சிகளை ரசித்து வந்துள்ளார்.

3க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சஞ்சீவ் தனது வலையில் சிக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்படி பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் பயத்தில் விடுதியை காலி செய்து விட்டு சென்று விட்டனர்.

செல்போனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குளியல் காட்சிகளை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதற்காக சஞ்சீவ் நெருங்கிய நண்பர்களுக்காக தனியாக வாட்ஸ் அப் குழு நடத்தி வந்தது பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்த போது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் பல இளம் பெண்கள் சிக்கி உள்ளதால் விசாரணை குறித்து வெளியில் தெரியாமல் ரகசியமாக நடத்த சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்