நெல் ஜெயராமன் திடீர் மரணம்! நடிகர் சிவகாரத்திகேயன் முதல் ஆளாக வந்து செய்த உதவி

Report Print Santhan in இந்தியா

அரியவகை நெல் விதைகளை சேகரித்த தமிழகத்தைச் சேர்ந்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(50). இவர் 174 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார்.

பாரம்பரிய நெல்வகைகளை காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன்.

அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் கார்த்திக், சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் எனப் பலரும் அவருடைய சிகிச்சைக்கு உதவினர்.

அதுமட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயன், அவரின் உடல்நிலையை அறிந்து சென்னைக்கு அழைத்து வந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நெல் ஜெயராமன் உடல் நிலை நேற்று மாலை மோசமடைந்தது. உடனடியாக அவர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டர்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளன.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.

மேலும் இவரின் மரண செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்த நடிகர் சிவகாரத்திகேயன், அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தேவைப்படும் உதவிகளையும், அவருடைய மகனின் கல்விச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்