லாட்ஜிற்கு காதலியை வரவழைத்து சினிமா பிரபலம் தினேஷ் செய்த செயல்: கைது செய்த பொலிசார்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் லாட்ஜிக்கு காதலியை வரவழைத்து தாக்கிய சினிமா ஜிம் டிரைனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசன்பட்டையைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா. 29 வயதான இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையா தினேஷ்(27) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தினேஷ் பழவந்ததாங்கலில் தங்கி அங்கிருக்கும் லாட்ஜில் அறை ஒன்று எடுத்து சினிமா நடிகர்களுக்கு ஜிம் டிரைனராக உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்டெல்லாவை போன் மூலம் தொடர்பு கொண்ட தினேஷ் தன்னுடைய அறைக்கு வரும் படி கூறியுள்ளார்.

இதையடுத்து ஸ்டெல்லா அங்கு சென்ற போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தினேஷ், ஸ்டெல்லாவின் கன்னத்தில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்துள்ளார்.

அதன் பின் ஸ்டெல்லா காதலன் தன்னை தாக்கிவிட்டதாக கூறி, அந்த காயத்துடன் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அவர் இருக்கும் பகுதிக்கு சென்ற பொலிசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் மீது 8 வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்