காழ்ப்புணர்ச்சியோடு பழி சொல்கிறார் சின்மயி...பயப்படும் ஆள் நான் இல்லை: ராதாரவி ஆவேசம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாடகி சின்மயி காழ்ப்புணர்ச்சியோடு என் மீது பழி சொல்லியிருக்கிறார் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

ராதாரவியின் பெயருக்கு முன்னால் போட்டுக்கெள்ளும் டத்தோ பட்டம் பொய்யானது என்று ஆதாரத்தோடு சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள ராதாரவி, மலேசியாவில் வழங்கப்படும் டத்தோ பட்டங்கள் மதிப்பு மிக்கவை.

அங்குள்ள பெடரல் அரசாலும், சுல்தான்களாலும், மாநில கவர்னராலும், ஜூலு பிரிவினராலும் 4 வழிகளில் இவை வழங்கப்படுகின்றன.

எனக்கு டத்தோ பட்டத்தை சுல்தான் வழங்கினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதை பொய் என்று சொல்லி விருது வழங்கியவர்களையே அவமதித்து இருக்கிறார் சின்மயி.

இதற்காக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி சின்மயி மற்றும் அவரது தோழி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஏற்பாடு நடக்கிறது.

இதன்மூலம் சின்மயி மலேசியாவுக்கு செல்ல தடைவிதிக்கப்படலாம். டப்பிங் யூனியனில் இருந்து அவரை நீக்கி விட்டதாக காழ்ப்புணர்ச்சியோடு என்மீது பழி சொல்லி வருகிறார்.

சின்மயி மிரட்டல்களுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. எதிர்ப்புகளிலும், போராட்டங்களிலும் வளர்ந்தவன். டத்தோ பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்